இஸ்ரேல் நடத்திய ஆய்வில் பைசர் கொரோனா தடுப்பூசி 98% இறப்புகளை தடுத்து நிறுத்துகிறது என தெரியவந்துள்ளது.
உலகில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை நிறுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என என்று பல ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது பரவலாக தடுப்பூசிகள் ரத்தக் கட்டிகளை உருவாக்குகிறது என்றும் பல மரணங்களை ஏற்படுத்துகின்றது எனவும் தெரியவந்ததை தொடர்ந்து மக்கள் தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல் பைசர் கொரோனா தடுப்பூசி பற்றி ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பைசர் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டு 14 நாட்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் போடப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.மேலும் இந்த தடுப்பூசி 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொற்றுநோய்க்கு எதிராக 94.1 சதவீதம் பாதுகாப்பையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக 96.9 சதவீதம் மற்றும் மரணத்திற்கு எதிராக 97 சதவீதம் பாதுகாப்பை தருகிறது என தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 100 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலில் கொரோனா குறைவுக்கு காரணம் பைசர் தடுப்பூசி தான் எனவும் இதனால் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் தடுப்பூசியின் பாதுகாப்பு எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.