Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எல்லாரும் விதிமுறைகளை கடைபிடியுங்கள்…. கட்டுப்பாட்டை மீறி துணிக்கடை…. 1,00,000 ரூபாய் அபராதம்….!!

வேலூரில் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வந்த துணிக்கடைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் பெரிய நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை. இந்நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நேற்று முதல் அமுலில் இருந்து வருகின்றது. இந்த கட்டுப்பாடுகள் சரியான நேரத்தில் நடைபெறுகிறதா என்று மாநகராட்சி கமிஷனர் தலைமையில் சைதாப்பேட்டை காந்தி ரோடு, பேரி சுப்பிரமணியசாமி கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, மெயின் பஜார் போன்ற இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அப்போது பேரி சுப்பிரமணிய சாமி கோவில் தெருவில் கட்டுப்பாட்டை மீறி துணிக்கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இதனால் அந்த துணிக்கடை அடைக்கப்பட்டு, அதிகாரிகள் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதைப்போன்று சமூக இடைவெளி கடைபிடிக்காமல், முக கவசம் அணியாமல், மற்றும் கட்டுப்பாட்டை மீறி செயல்படுபவர்க்கு 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Categories

Tech |