தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற உடன் மு க ஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அவை என்னென்ன என்பதை பற்றி இதில் பார்ப்போம்.
தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் அங்கிருந்து தலைமை செயலகத்திற்கு முகஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முகஸ்டாலின் முதன்முறையாக தலைமைச் செயலகம் வருகை தந்தார். அப்போது அவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் விருது வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல்வராக பதவியேற்ற உடன் அவர் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
1. ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும்.
2. ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.
3. நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.
4. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும்
5. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு புதிய துறை உருவாக்கம் போன்ற கோப்புகளில் தமிழகத்தின் முதல்வர் மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார்.