மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பூக்கடை ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வ.உ.சி நகர் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேடசந்தூரில் இருக்கும் பூக்கடையில் பூ கட்டும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து இவர் காக்காதோப்பு பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது.
இதனால் தூக்கி வீசப்பட்ட பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடாசல குமரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.