ராஜஸ்தான் மாநிலத்தில் 90 அடி ஆழ்துளை கிணற்றில் நான்கு வயது சிறுவன் தவறி விழுந்தன. சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றது.
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் ஜலோர் மாவட்டத்தில் உள்ள லாச்சிரி கிராமத்தில் நாகாராம் தவசி என்பவரின் குடும்பம் வசித்து வருகின்றன. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 90 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு புதிதாக தோண்டப்பட்டது. இந்தக் கிணற்றில் இவரது 4 வயது மகன் அனில் தேவசி யாரும் எதிர்பாராத விதமாக நேற்று மதியம் தவறி விழுந்துவிட்டான்.
பின்பு சில மணி நேரங்களில் குழந்தை கிணற்றுக்குள் விழுந்தது குறித்து கிராம மக்களுக்கு தெரியவந்ததும், உடனடியாக காவல் துறைக்கும், தீயணைப்பு துறைக்கும்கிராமமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதனை அறிந்து உடனடியாக குழந்தையை மீட்பதற்கு எடுக்கப்பட்ட முதல்கட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்ததால், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதன்பின் கிணற்றுக்குள் 90 அடி ஆழத்தில் குழந்தை சிக்கிக்கொண்டதால், குழந்தையை கண்காணிப்பதற்கும், அவனுடன் தொடர்பு கொள்வதற்கும் கேமரா ஒன்று உள்ளே இறக்கப்பட்டது. அதன்பின் சிறுவன் மயக்கம் அடையாமல் இருக்க குழாய் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்பின் சிறுவன் பயப்படாமல் இருக்க அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவனுக்கு உணவும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து இரவு நேரமானதால் மின் விளக்குகள்பொருத்தப்பட்டு தற்போது வரை மீட்பு பணிகள் தொடர்ந்து சிறுவனை மீட்பதற்காக முயற்சி செய்து வருகின்றனர்.