Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அப்போ நீங்க டாக்டர் இல்லையா…? கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை… சோதனையில் வெளிவந்த உண்மை…!!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் மலை கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்துவருகிறார். இவரும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பர்வதனள்ளி கிராமத்தில் வசிக்கும் அங்கமுத்து என்பவரும் இணைந்து கோட்டையூர் மலை கிராமத்தில் கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் முறையாக மருத்துவம் படிக்கவில்லை.

இந்நிலையில் இவர்கள் இருவரும் கோரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞான மீனாட்சி, ஓசூர் வட்டார மருந்து ஆய்வாளர் காந்தி, மருத்துவ குழுவினர் மற்றும் காவல்துறையினர் போன்றோர் கலெக்டரின் உத்தரவின் படி கோட்டையூர் மலை கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

அதன்பின் அதிகாரிகள் ஆனந்தன் நடத்தி வரும் கிளினிக்கை சோதனை செய்துள்ளனர். அப்போது தான் ஆனந்தனும், அங்கமுத்துவும் முறையாக மருத்துவம் படிக்காமலேயே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆனந்தனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய அங்கமுத்துவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |