47 கிலோ புகையிலை பொருட்களை காரில் கடத்தி சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் சோதனை சாவடியில் நல்லூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள 47 கிலோ புகையிலை பொருட்களை காரில் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் காரிபாளையம் பகுதியில் வசிக்கும் குமார் மற்றும் பன்னீர் செல்வம் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் கடத்திய 47 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.