நாமக்கல் மாவட்டத்தில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 2 திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கந்தம் பாளையம் அருகே உள்ள மூர்த்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சம்பூரணம். இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பூரணம் மற்றும் அவரது பேரனான அஜித்குமாரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அங்கு வந்த 2 கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வெளியே சென்ற அஜித்குமார் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் கதவு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அஜித் உள்ளே சென்று பார்த்தபோது அந்த 2 திருடர்களும் வீட்டிற்கு உள்ளே பதுங்கியிருந்தனர். இதனை கண்ட அஜித் உடனடியாக அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இதனை அறிந்த 2 திருடர்கள் உடனடியாக தப்பித்து ஓடியுள்ளார்.
மேலும் இது குறித்து அஜித்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த 2 கொள்ளையர்களை பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் கரூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் வசிக்கும் பாண்டியன்(34) மற்றும் சிந்தாமணிபட்டி அழகர்(29) என தெரியவந்துள்ளது.