காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று ஐநா சபையில் விவாதம் நடைபெற உள்ள நிலையில், இதனை சீனா பெரிதளவு கண்டு கொள்ளாததால்பாகிஸ்தானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்ட பின் இதற்கு எதிராக இந்தியாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்தும் இதற்கான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதே நிலையில் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக பிரித்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் பாகிஸ்தான் இந்தியாவுடனான உறவை முறித்துக் கொண்டும் தங்களது எதிர்ப்பை காட்டினர்.
இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இதுகுறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று ஐநா சபையிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை மறுத்து அதற்கு பதிலாக ஆலோசனை வேண்டுமானால் மேற்கொண்டு கொள்ளலாம் என்று ஐநா சபை தெரிவித்தது. அதன்படி, இன்று மூடிய கதவுகளின் உள்ளே தகவல் பரிமாற்றம் மற்றும் ஆலோசனைக்கு மட்டும் பாகிஸ்தானுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
வெளிப்படையான விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று கூறிய பாகிஸ்தானுக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது. 15 உறுப்பு நாடுகளில் சீனாவை தவிர இதர நாடுகள் பாகிஸ்தானின் கோரிக்கையில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சீனாவுக்கும் எந்த நாட்டின் ஆதரவும் கிடைக்க வில்லை சீனாவும் பல்வேறு பிரச்சினைகளை விவாதிக்கும் போது இந்த பிரச்சினையையும் விவாதிக்கலாம் என்ற அளவுக்குத்தான் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கிறது.