Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் … விலகிய டிரென்ட் பவுல்ட்…!!!

ஐபில் போட்டியில் பங்குபெற்ற, நியூசிலாந்து வீரர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்.

ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகளை  காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் இடம் பெற்றுள்ள, வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற நியூசிலாந்து வீரர்களில், கேன் வில்லியம்சன் உள்ளிட்ட 4 வீரர்கள் ,வருகின்ற 11ம் தேதி டெல்லியில் இருந்து, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு திரும்ப உள்ளனர் . ஆனால் மற்ற நியூசிலாந்து வீரர்கள் இன்று நாடு திரும்புகின்றனர் .

இதில் மும்பை அணியில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் பவுல்ட் , 2 வாரம் குவராண்டைன் முடிந்த பிறகு குடும்பத்தினருடன் , ஒரு வாரம் தங்கியிருக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் அடுத்த மாதம் 2ஆம் தேதி இங்கிலாந்திற்கு  எதிரான 2  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ,  அவர்  பங்குபெற மாட்டார் என்று தெரிய வந்துள்ளது . ஆனால் ஜூன் 18-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் , அவர் நிச்சயமாக பங்கு பெறுவார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது

Categories

Tech |