ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலில் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியபோது, நெல்லை மேம்பாளையத்துக்கும் செங்குளம் ரயில் நிலையத்திற்கும் இடையில் ஒரு பெண் சடலமாக கிடப்பதாக அப்பகுதியில் இருப்பவர்கள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட பெண் நெல்லை மாவட்டத்திலுள்ள மருதநகர் ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த புத்திர செல்வி என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணமாகி முத்துப்பாண்டி என்ற கணவரும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் புத்திர செல்வி இரவு வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் புத்திர செல்வியை தேடி வந்துள்ளனர். இதனையடுத்து ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்துள்ளார். மேலும் புத்திர செல்வி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.