முன்னணி விஷாலின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது எனிமி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக பிரபல முன்னணி நடிகர் ஆர்யா நடிக்கிறார். மிருணாளினி கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து விஷாலின் 31 வது திரைப்படத்தின் புதுமுக இயக்கத்துக்கு து.ப.சரவணன் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. மேலும் இப்படம் ஒரு அதிகாரபலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் ஒரு சாமானியனின் கதை என்று கூறப்பட்டுள்ளது.