திருநெல்வேலியில் மொபட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் ஆயிஷா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று தன்னுடைய மொபட்டை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்தார். அவர் வீட்டின் வாசலுக்கு வந்து பார்த்த போது திடீரென்று அவருடைய மொபட் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தண்ணீரை மொபட் முழுவதுமாக ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார்.
ஆனாலும் மொபட் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகியது. இதனை மர்ம நபர்கள் எவரோ செய்திருக்கலாம் என்று அவர் ஏர்வாடியிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.