Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் அடுத்தடுத்த மூன்று படங்கள்… இவர்கள் தான் இயக்குனர்களா?… வெளியான புதிய தகவல்…!!!

வலிமை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் அடுத்தடுத்த மூன்று படங்களின் இயக்குனர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்கிறார் .

Thala 60: Ajith Kumar to play a tough cop in H Vinoth's upcoming film |  Tamil Movie News - Times of India

இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த அடுத்த மூன்று படங்களின் இயக்குனர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்திற்குப் பிறகு மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன்பின் அஜித்தின் அடுத்தடுத்த 2 படங்களை சுதா கொங்கரா மற்றும் சிவா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |