உயர் நீதிமன்றங்கள் பொது நல மனுக்களை பயன்படுத்தி அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் ரஞ்சன் கோகோய் உள்ளிட்டோர் அடங்கிய மேடையில் பேசிய அவர் நீதித்துறையை ஒழுங்குபடுத்த உள் சீர்திருத்தங்கள் அவசியம் என்று வலியுறுத்தினார். நீதிபதிகளின் தீர்ப்பு பொறுப்பு மிகுந்தவையாக இருப்பது அவசியம் என்று அவர் தெரிவித்த அவர், இது உயர் நீதிமன்றங்களுக்கு மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்திற்கும் பொருந்தும் என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
சில நீதிபதிகள் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை தங்கள் ஓய்வு நாளுக்கு முன்பு வழங்குகிவிட்டு, ஓய்வுக்கு பின்னர் தொலைக்காட்சி விவாதங்களில் அமர்ந்து தாங்கள் அளித்த தீர்ப்புகளை நியாயப்படுத்தி பேசுகின்றனர் என்றும் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார். மாநில அரசுகளுக்கு இணையான தனி அரசாங்கம் நடத்த உயர் நீதிமன்றங்கள் பொதுநல மனுக்களை பயன்படுத்தி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.