தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் ஸ்டாலின்.
இந்நிலையில் ஜோதிட கட்டத்தில் ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு இல்லை என பெரும்பாலான ஜோதிடர்கள் கூறி வந்த நிலையில், அதனை தவிடுபொடியாக்கி இன்று முதல்வராகி யுள்ளார். ஸ்டாலின் தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற வள்ளுவனின் வாக்கிற்கு இணங்க தன் 10 வருட அயராத உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம் அதை மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.