அமெரிக்கா பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு சிறுமி துப்பாக்கி எடுத்து வந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியரை சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா Idaho மாநிலத்தில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை பள்ளிப் பையில் வைத்து எடுத்து வந்துள்ளார். அவர் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் வேலையில் திடீரென பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டதில் மாணவர்கள் இருவர் மற்றும் ஆசிரியர் என மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து பின்புறமாக வந்த ஆசிரியர் ஒருவர் மாணவியின் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கி அவரையும் பிடித்து வைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சிறுமியை கைது செய்தனர்.இந்நிலையில் சிறுமியின் எதற்காக இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார் அவரின் நோக்கம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.