Categories
Uncategorized உலக செய்திகள்

பலி எண்ணிக்கை 10,012…. இருந்தாலும் நாட்டின் நிலைமை சீராக உள்ளது….. அறிவிப்பு வெளியிட்ட கொரோனா நிபுணர் குழு….!!

சுவிட்சர்லாந்தில் தற்போதைய கொரோனா நிலை குறித்து கொரோனா நிபுணர் குழு தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுவிட்சர்லாந்திலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் தகவலின்படி இதுவரை இதுவரை 664,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  10,012 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இதுக்குறித்து சுவிட்சர்லாந்து நிபுணர்குழு கூறுகையில் தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் சீராக இருக்கிறது என்றும் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி திட்டத்தால் வைரஸின் தாக்கம் குறைந்துள்ளது என்றும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே நோயாளிகள் உள்ளனர் எனவும் கொரோனா குறைந்து வருவது சந்தோசத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |