Categories
மாநில செய்திகள்

Breaking: 2 மாதம் இலவசம், புதிய பென்ஷன்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டபேரவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 16 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் என். ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த கூட்டணியின் தலைவராக இருந்த என். ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியை, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் ஒருமனதாக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனை தொடர்ந்து ஆட்சியமைக்க உரிமை கோரும் கடித்ததை கடந்த மே 3ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம், ரங்கசாமி வழங்கினார்..

இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15-வது சட்டபேரவைக்கான முதலமைச்சர் பதவியை ரங்கசாமி ஏற்றார். துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்ட பிறகு முதலில் மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி நிலுவையில் உள்ள இரண்டு மாதத்திற்கான இலவச ரேஷன், விண்ணப்பித்த முதியோர், விதவைகள் 10 ஆயிரம் பேருக்கு புதிய பென்ஷன், உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் கோப்புகளில் முதல்வர் ரங்கசாமி கையெழுத்திட்டார்.

Categories

Tech |