Categories
உலக செய்திகள்

லண்டனில் ஜி-7 மாநாடு…. இந்தியா குழுவினரில் 2 பேருக்கு தொற்று…. தகவலை வெளியிட்ட இங்கிலாந்து அதிகாரிகள்….!!

லண்டனில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் இந்திய குழுவினரில் 2 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஜி-7 மாநாட்டிற்கு பங்கேற்க சென்ற இந்திய குழுவினரில் 2 பேருக்கு தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முழு குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த மாநாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. மேலும் அதில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கும் தினந்தோறும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

அதில் இந்திய பிரதிநிதிகள் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் மாநாட்டில் பங்கேற்கும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு இதுவரை தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்திய குழுவினர் காணொளி வழியாக மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Categories

Tech |