Categories
உலக செய்திகள்

“பிரிட்டன்-பிரான்ஸ் போர் உண்டாக காரணமான பெண்!”.. மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்.. வெளியான தகவல்..!!

பிரிட்டனிற்கும் பிரான்சிற்கும் இடையே போர் சூழலை ஏற்படுத்திய பெண் கடல்வள அமைச்சர் மீனவ குடும்பத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. 

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் பிரச்சனை உண்டாக காரணமான Annick Girardin (56) என்ற கடல்வள அமைச்சர், Brittanyயில் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியிருந்த  குடும்பத்தில் பிறந்தவர். இவர் பிரெக்சிட்டால் பிரெஞ்சு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்.

எனவே தான் பிரெஞ்சு மீன்பிடிப் படகுகளுக்கு உரிமம் பெற தாமதம் ஏற்பட்டு வந்ததால், அதனை எதிர்த்து போராடும் விதமாக, அவர் உண்டாக்கிய பிரச்சனை தற்போது சுமார் 100 மீன்பிடி படகுகள் ஜெர்சி துறைமுகத்தை சூழ்ந்துள்ளது. எனவே இதனை எதிர்கொள்ள பிரிட்டன் பிரதமர் இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அதாவது Annick வாழ்க்கையில் எவ்வளவு போராட்டங்கள் வந்தாலும் அதைப்பற்றி வருத்தப்படாத மனநிலை உடையவராம். கடந்த 2017 ஆம் வருடத்தில் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸ் அதிபராக பதவியேற்றபோது பிரான்சின் கடல்கடந்த அமைச்சராக இவர் பொறுப்பேற்றுள்ளார். அதன் பின்பு கடந்த 2020 ஆம் வருடம் கடல்வள அமைச்சர் என்ற பதவியும் மேக்ரோன் தான் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |