ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
ராஜஸ்தான் ஜலூர் மாவட்டத்தில் உள்ள லச்சாரி கிராமத்தில் நேற்று வயல் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த அனில்(4) என்ற சிறுவன் அங்கு மூடப்படாமல் இருந்த 95 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை குழுக்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டது.
மேலும் சிறுவனுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டதோடு குழந்தையின் நிலையை கண்காணிக்க சிசிடி கேமரா கயிறு மூலம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.