உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது, ஜூன் 18 முதல் 22-ம் தேதி வரை, இங்கிலாந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சார்பில் 8 முன்னணி அணிகளை கொண்டு , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 2019- 2021 ஆம் ஆண்டு வரை விளையாடும் டெஸ்ட் போட்டிகளில், வெற்றி பெற்ற முதல் 2 இடங்களை பிடிக்கும் ,அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும். இந்த இறுதிப் போட்டியானது, இங்கிலாந்தில் லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும், என்று ஐசிசி முன்பே தெரிவித்திருந்தது.
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பங்குபெறும் வீரர்கள் இன்று தேர்வு செய்யப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதில் 4 தொடக்க வீரர்கள் ,5 மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், 9 பவுலர்கள் மற்றும் 3 விக்கெட் கீப்பர்கள் ஆகியோரின் தேர்வு செய்ய உள்ளதாக சேட்டன் சர்மா தலைமையில் நடைபெற்ற குழு தெரிவித்துள்ளனர்.