மலேசியா ஏர்லைன்ஸின் MH370 விமானம் மாயமானதற்கு அதன் விமானி தான் காரணம் என்று விமானவியல் பொறியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
மலேசியா ஏர்லைன்ஸிற்குரிய MH370 என்ற போயிங் 777 ரக விமானம் கடந்த 2014 ஆம் வருடத்தில் மார்ச் மாதத்தில் 8 ஆம் தேதி அன்று சுமார் 239 பயணிகளுடன் திடீரென்று காணாமல் போனது. தற்போது வரை அதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இந்நிலையில் விமானவியல் பொறியாளர் Richard Godfrey, அந்த விமானத்தின் விமானி Zaharie Ahmad Shah, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எனவே அவர் திட்டமிட்டு தான் விமானத்தை கடலில் மூழ்க செய்துள்ளார் என்று கூறியுள்ளார். அதாவது Godfrey விமானத்தின் பாதை தொடர்பாக ஆராய்ந்து கூறியுள்ளார். அதன்படி விமானி சுய நினைவோடு தான், வர்த்தக விமானங்கள் செல்லும் நேரத்தை கணக்கிட்டு அதன் மீது மோதாமல் இருக்கும் படி தன் பாதையை திட்டமிட்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
ரேடாரில் மாட்டினால் கூட விமானம் எங்கு பயணிக்கிறது என்று கண்டறிய முடியாத படி அவர், தன் பாதையை திட்டமிட்டு வேண்டுமென்றுதான் விமானத்தை கடலில் மூழ்கடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.