அமெரிக்காவில் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் பள்ளிக்கு துப்பாக்கியை மறைத்து கொண்டு வந்து சரமாரியாக சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள Idaho என்ற மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு மாணவி துப்பாக்கி ஒன்றை தன் பையில் மறைத்து பள்ளிக்கு கொண்டு வந்துள்ளார். அதன்பின்பு அந்த மாணவி திடீரென்று துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். இதனால் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியைக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின்பு மற்றொரு ஆசிரியை அந்த மாணவியை பிடித்து துப்பாக்கியை கைப்பற்றியுள்ளார். இதனைத்தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் அந்த பள்ளிக்கு விரைந்து வந்து, ஆசிரியர் பிடித்து வைத்த மாணவியை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆனால் சிறுமி எதற்காக துப்பாக்கியால் சுட்டார் என்று தெரியவில்லை. எனவே தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.