பிரிட்டனில் Hartlepool தொகுதிக்கான இடைத்தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி முதன் முறையாக தொழிலாளர் கட்சியை வீழ்த்தி வெற்றிபெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.
பிரிட்டனில் நேற்று கவுன்சில்களுக்கான தேர்தல் மற்றும் Hartlepool தொகுதிக்குரிய இடைத்தேர்தல் இரண்டும் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் 16 பேர் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று இதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றிருக்கிறது.
கன்வர்வேடிவ் கட்சியில் களமிறங்கிய Mortimer, சுமார் 6,940 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை கைப்பற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது கடந்த 1974-ல் லிலிருந்து Hartlepool தொகுதியில், தொழிலாளர் கட்சி தான் வெற்றி பெற்று வந்துள்ளது. இந்நிலையில் முதன் முதலாக கன்சர்வேடிவ் கட்சி வெற்றியடைந்து சாதனை நிகழ்த்தியுள்ளது.