Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“5000 பனை விதைகள்” சுதந்திர தினத்தில் மாணவர்கள் ஆற்றிய சமூக தொண்டு..!!

சேலம் மாவட்டம் கச்ச பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5000 பனை விதைகளை ஏரிக்கரையில் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாரமங்கலம் வரலாற்று அறக்கட்டளை சார்பில் கச்ச பள்ளி ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையில் ஏராளமான மாணவர்கள் 5000 பனை விதைகள் ஆர்வத்துடன்  விதைத்தனர். 

Image result for பனை விதைகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்வில் மாணவர்களிடம் மரம் வளர்த்து நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வின்போது பனை மரத்தில் கட்டப்பட்டிருந்த தூக்கணாங்குருவிக் கூடுகளை அங்கிருந்த மாணவர்கள் ஆர்வத்தோடும் வியப்போடும்  பார்த்து ரசித்தனர்.

Categories

Tech |