கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு க ஸ்டாலின் ஆட்சி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்ற பின் மு க ஸ்டாலின் கொரோனா நிவாரண தொகை உள்ளிட்ட சில நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். இதில் குறிப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் சிகிச்சை செலவை அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் நன்றி தெரிவித்துள்ளார்.