தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அதைத்தொடர்ந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக பாதிப்பு உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 26,465 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 13,23,965. தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,73,439. இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 197 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15,171 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 5081 பேர் உயிரிழந்துள்ளனர்.