திருநெல்வேலியில் மின்சாரம் தாக்கியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் இசக்கி முத்து என்பவர் வசித்து வந்தார். இந்தநிலையில் இவருடைய உறவினர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் இசக்கிமுத்து அந்த வீட்டினுடைய கட்டிடத்திற்கு தண்ணீரை பாய்ச்சுவதற்கு மோட்டாரினுடைய சுவிட்சை போட்டுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக இசக்கியின் மீது மின்சாரம் பாய்ந்ததால் அவர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.