Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு… அத்தியாவசியக் கடைகளின் நேரத்தைக் குறைப்பதா..? சீமான் கண்டனம்…!!

டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு அத்தியாவசியக் கடைகளின் நேரத்தைக் குறைப்பதில் நியாயமா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அத்தியாவசிய தேவைகளின் நேரத்தை காலை 6 மணி முதல் பகல் 12 மணி மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 வரை செயல்படும் என்று தெரிவிக்கபட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டு அத்தியாவசியக் கடைகளின் நேரத்தை குறைப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளின் நேரத்தை மாலை 6 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |