ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் டேன் தெஹான் 2022 ஆம் ஆண்டின் பாதி வரை ஆஸ்திரேலிய எல்லைகள் திறக்கப்படாது எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு சர்வதேச எல்லைகளும் மூடப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 21 பேர் மட்டுமே பதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸால் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் வைரஸின் தாக்கம் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக சர்வதேச எல்லையை திறக்காமல் வைத்துள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா வர்த்தக மந்திரி டேன் தெஹான்விடம் விமான நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சர்வதேச எல்லைகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் கேள்விக்கு டேன் தெஹான் சர்வதேச எல்லைகள் 2022 ஆம் ஆண்டு பாதிவரை முழுமையாக திறக்கப்படாது என்றும் ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு நியூசிலாந்துக்கும் இடையேயான பயணம் மீண்டும் தொடரும் என சாமர்த்தியமாக பதில் கூறினார்.