Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினின் ஆட்சி முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும்… நாராயணசாமி புகழாரம்…!!

தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு க ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தின் முதல்வராக இன்று காலை திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து சில புதிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இதை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற உள்ள முக ஸ்டாலினுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தற்போது புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் அறிவித்த நலத்திட்டங்களை பாராட்டியுள்ள நாராயணசாமி புதிதாக அமைந்திருக்கும் திமுக ஆட்சி தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |