12 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, உத்திரபிரதேசம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போட முன்னுரிமை அளிக்க வேண்டும். கோவாக்சின் மற்றும் கோவிட்சீல்டு தடுப்பு ஊசி இரண்டாவது டோஸ் போடுவதால் தொற்று எதிர்ப்பு சக்தி முழுமை பெற வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.