Categories
மாநில செய்திகள்

ADMK எம்எல்ஏக்கள் கூட்டத்தில்… ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று இன்று ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் அதிமுகவில் பெரும் குழப்பம் நீடித்து வருகின்றது.

இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் அவர்கள் கூறியதாவது:

ஈபிஎஸ்: தேர்தலில் செலவு செய்தது யார்? 234 தொகுதிகளிலும் உழைத்தது யார்? கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எப்படி விட்டுக் கொடுப்பது

ஓபிஎஸ்: நீங்கள் செலவு செய்த படம் கட்சியினுடைய தானே. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அறிவித்ததால் தென்மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். என்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

Categories

Tech |