Categories
ஆன்மிகம் இந்து

மறந்து கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்… கஷ்டம் மேலும் அதிகரிக்கும்…!!

நாம் சிலருக்கு பல பொருட்களை தானமாக வாங்குவோம். அப்படி நான் வழங்கும் பொருள்கள் மூலம் நமக்கு துதிர்ஷ்டம் ஏற்படும். அவை என்னென்ன பொருள்கள் என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

தர்மம் தலைகாக்கும் என்பது பழமொழி. நாம் செய்யும் பாவங்கள் தர்மம் கொடுப்பதின் மூலம் குறையும். அப்படி தானம் கொடுப்பதற்கு முன்பு எந்த பொருளை எல்லாம் தானமாக வழங்க வேண்டும் என்பதையும், வழங்க கூடாது என்பதையும் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அப்படி நாம் கொடுக்க கூடிய தானத்தால் நமக்கு கஷ்டமும் வர வாய்ப்புள்ளது.

கிழிந்த துணி:

கிழிந்த துணிகளை தானமாக வழங்குவதால் துரதிஷ்டம் துரத்தும். அதேபோல உடைந்த பொருட்களை தானமாக வழங்குவது மிகவும் தவறு. இதை தானமாக வழங்குவது நம் வீட்டு செல்வத்தை வழங்குவதற்கு சமம். நம் வீட்டில் லட்சுமி தேவியை கொடுப்பது போன்றது.

பிளாஸ்டிக் பொருட்கள்:

நாம் தானமாக பிளாஸ்டிக் பொருள்களை கொடுக்காமல் இருப்பது நல்லது. பிளாஸ்டிக் இந்த மண்ணை கெடுப்பது போல நாம் வழங்க கூடியதான பொருளில் பிளாஸ்டிக் இருந்தால் அது நாம் வளர்ச்சிக்கு தடை விதிக்கும்.

கூர்மையான பொருட்கள்:

கூர்மையான பொருட்களான கத்தரிக்கோல், கத்தி, ஊசி போன்ற பொருள்களை ஒருவருக்கு தானமாக வழங்கினால் வீட்டில் துரதிஷ்டம் வரும்.

அன்னதானம் செய்யுங்கள்:

பேருந்து ரயில் நிலையங்களில் முதியவர்கள், பிச்சை எடுப்பவர்களை பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு முடிந்த அளவுக்கு காசு கேட்டால் கொடுக்காமல் ,ஒருவேளை உணவு வாங்கி கொடுப்பது உங்களுக்கு புண்ணியத்தை தரும். தானத்தில் சிறந்தது அன்னதானம்.

பழைய உணவுகளை தானமாக வழங்குவது மிகவும் தவறு. நம் வருமானத்திற்கு அதிகமாக செலவை கொண்டுவரும். எனவே ஒருபோதும் பழைய உணவுகளை கொடுக்காதீர்கள்.

திருமண நாள், பிறந்த நாள், பெரிய பண்டிகை சமயங்களில் தேவையற்ற பெரிய செலவுகளை செய்வதற்கு பதிலாக அந்த பணத்தை அனாதை இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் கொடுங்கள். ஏழைகளுக்கு உணவு அளிக்கலாம். இல்லாத ஒருவருக்கு அவர்களின் வயிறார உணவு அளிப்பதனால் அவர்களின் வாழ்த்தும் உங்களை வாழவைக்கும்.

Categories

Tech |