இட்லி தோசைக்கு ஏற்ற புதுவித தக்காளி சட்னி…
தேவையான பொருட்கள்:
தக்காளி – 4
பல்லாரி – 2
எள் – 2 தேக்கரண்டி
வத்தல் – 16
வேர்க்கடலை – 2 தேக்கரண்டி
புளி – சிறு எலுமிச்சை அளவு
கடுகு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
உளுந்து – 1/4 தேக்கரண்டி
ந.எண்ணெய் – சிறிதளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எள் மற்றும் வேர்க்கடலை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். கடாயில் சிறிதளவு நல்லெண்ணை ஊற்றி கடுகு, சீரகம், உளுந்து , வத்தல், புளி , வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.பிறகு அதனுடன் வெட்டி வைத்துள்ள தக்காளி பழத்துண்டுகள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து வதக்கி
எள் , வேர்க்கடலையை சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற தக்காளி சட்னி தயார்!!!