Categories
தேசிய செய்திகள்

12 மாநிலங்களில் உச்சத்தில் இருக்கும் கொரோனா…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, உத்திரப் பிரதேசம், ஆந்திரா மற்றும் குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க வேண்டும். கோவிஷில்டு, கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடுவதால் தொற்றுஎதிர்ப்பு சக்தி முழுமை பெற வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |