இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதுமட்டுமன்றி கொரோனா நோயாளிகளை ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல பெரும்பாலான இடங்களில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அதன்படி கொரோனா நோயாளியை அரியானாவின் குருகிராம் இப்பகுதியிலிருந்து லூதியானா அழைத்துச் செல்வதற்காக ரூ.1.2 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைத்து ஆம்புலன்ஸ்க்கு இவ்வளவு தொகை செலவழித்துச் இருப்பதாக அந்த பெண் வருத்தம் தெரிவித்துள்ளார்.