Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மரணம் தான் தீர்வா..? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோக சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் கிராமத்தில் சங்கம்மாள் ( 75 ) என்பவர் வசித்து வந்தார். இவர் தன்னுடைய மகன் குடும்பத்தினருடன் இணைந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்த சங்கம்மாள் பயிர்களுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை குறித்து இளையான்குடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |