நேற்று நடந்த பதவியேற்பு விழாவையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார் ஸ்டாலின். இதையடுத்து 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இதன் முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி ஆக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ், சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக தாமரைக்கண்ணன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.