தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். காய்கறி, இறைச்சிக் கடைகள் மற்றும் மளிகை கடைகள் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 மணிவரை அனுமதிக்கப்படும்.
உயிரியல் பூங்காக்கள், வணிக வளாகங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் செயல்பட அனுமதி கிடையாது. நடைபெற்றுவரும் கட்டிடப் பணிகள் அனுமதிக்கப்படும். உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. தேனீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். சாலையோர உணவகங்கள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும்.வருகின்ற திங்கட்கிழமை காலை 4 மணி முதல் 24ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.