Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி எதுவும் திறக்க கூடாது… வசமாக சிக்கிய வியாபாரிகள்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு தாசில்தார் சீல் வைத்து அபராதம் விதித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மதியம் 12 மணிக்கு மேல் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடத்தப்படுவதாக அதிகாரிக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் பேரில் ஆலங்குடி பகுதியில் தாசில்தார் கருப்பையா சோதனை செய்த போது அரசு உத்தரவை மீறி செயல்பட்ட இரண்டு கடைகளையும் மூடி சீல் வைத்துள்ளார். மேலும் 15 சிறிய கடைகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |