வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழவடையான் பகுதியில் இருக்கின்ற சாலையில் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது என்று கிராம அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஷேக் அப்துல்லா என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அந்த மூதாட்டி இறந்து கிடந்த இடத்தில் எந்தவித வாகனமும் இல்லை என்றும் ஒரு நம்பர் பிளேட் மட்டும் கிடைத்துள்ளது. இது குறித்து காவல்துறையினரிடம் கிராம நிர்வாக அலுவலர் தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த நம்பர் பிளேட் எந்த வாகனத்தினுடையது என்பதை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.