Categories
மாநில செய்திகள்

தனியார் நிறுவனங்கள் இயங்க தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி மக்கள் தேவையில்லாமல் வெளியில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு போது அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு வீட்டில் இருந்தபடி பணியாற்றும் முறையை பின்பற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி, மகளிர் உரிமை துறை தவிர மற்ற மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது என கூறியுள்ளது.

Categories

Tech |