அரியலூரில் ஒரே நாளில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் தினமும் பகல் 12மணிக்கு மேல் மளிகை, காய்கறி, கறி, டீ, துணி ,செல்போன் போன்ற கடைகள் திறக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து அங்கு ஒரே நாளில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது வரை அங்கு 6,095 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 53 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 5,576 பேர் கொரோனா தொற்றிற்கான சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 466 பேர் மருத்துவமனையில் சிகிச்சையை பெற்று வருகின்றனர்.