வேலூரில் கொரோனா பாதிப்பினால் ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு தினசரி அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதேபோன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்து வருவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இந்த நான்கு பேரில் ஒருவர் பாஜகவை சேர்ந்த தாயுமானவர். இவர் சென்னை இருக்கும் மதுரவாயல் மண்டலத்தின் செயலாளராகவும் மற்றும் சினிமா உதவி இயக்குனராகவும் இருந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.