Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல அவதிப்பட முடியல… மாணவி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வயிற்று வலி தாங்க முடியாமல் ஆசிட் குடித்த பிளஸ் 1 மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கூத்தங்குடி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரீத்தி என்ற மகள் இருந்தார். இவர் அறந்தாங்கி அரசு  பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட பிரீத்தி வலி தாங்க முடியாமல் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பிரீத்தி உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |