Categories
மாநில செய்திகள்

மே-10 முதல் ஆன்லைன் டெலிவரிக்கு அனுமதி இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கிய நிலையில் தமிழகத்தில் வருகிற ஜூலை 10 ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சில கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு  வெளியே சென்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் டெலிவரிக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்வி நிறுவனங்கள், தனியார் பயிற்சி நிறுவனங்களில் கோடைகால சிறப்பு முகாம்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |