Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் ஷங்கர் வாழ்த்து…. இரண்டு திட்டங்களுக்கு பாராட்டு…!!!

முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னணி இயக்குனர் ஷங்கர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனால் திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களது சமூகவலைத்தள பக்கத்தின் மூலமாக முதல்வர் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்’

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் முதல்வருக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் மு க ஸ்டாலின் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்குவதாகவும், நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றும் அமல்படுத்திய திட்டத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |